பாடல்
நாங்க வலைவீசி மீன் பிடிப்பவங்க
Naanga Valaiveesi Meen Pitippavanga
நாங்க வலைவீசி மீன்
பிடிப்பவங்க ஓ ஹையா
நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க
இயேசு நாதருங்க எங்க நாதருங்க
பாவி நானுங்க
படகைவிட்டு வந்தேனுங்க
பாசம் வச்சேங்க
பழைய குணம் போச்சுங்க
– நாங்க
யோவான் நானுங்க
யாக்கோபுக்கு தம்பிங்க
இயேசுவின் மார்பினிலே
சாய்ஞ்சு படுத்துக் கொண்டேனுங்க
– நாங்க
தோமா நானுங்க
சந்தேகமா இருந்தேங்க
நானும் இந்தியாவுக்கு
சுவிசேஷம் கொண்டு வந்தேங்க
– நாங்க
இந்த ஊரில் இருப்பவங்க
ரொம்ப ரொம்ப நல்லவங்க
இயேசுவை ஏற்றுக்
கொண்டால் இன்பமாய் இருப்பீங்க
– நாங்க