பாடல்
நான் யார நம்புவேன் நான் யார வெறுப்பேன்
Naan Yaara Nampuvaen Naan Yaara Veruppaen
Moses Rajasekar
நான் யார நம்புவேன்
நான் யார வெறுப்பேன் – 2
என்கிட்ட நல்லவன் போள் நடிச்சவங்க
நடுத்தெருவுல விட்டுப்புட்டாங்க
என்ன செய்வேன் என்பெருமானே – 3
வெளுத்ததெல்லாம் பாலுன்னு
நான் நெனைச்சேன்
கொழுத்துப் போயி தேவனையே
தினம் பகைச்சேன் – 2
புளிச்சுப்போன மனித வாழ்வை
நான் பார்த்தேன் – இதில்
தெகச்சிப்போயி தேவனே நான்
உம்மை நினைச்சேன்
– எங்கிட்ட
பாடுபட்டு தேடி சேர்த்த ஆஸ்தி எல்லாம்
கேடு கெட்டு உளுத்துப்போயி அழிந்ததய்யா
தேடி ஓடி சம்பாதித்த உறவு எல்லாம் – ஒரு
நொடிப்பொழுதில் என்னை விட்டு
மறைந்ததய்யா
நான் எந்த நிலையில் இருந்தாலும்
கைவிடாத தேவனே நான்
உம்மை நம்புவேன் நான் உம்மை துதிப்பேன் – 8
– எங்கிட்ட