பாடல்
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசைய்யா
Naan Utaintha Sithaintha Paaththiram Iyaesaiyyaa
Lucas Sekar
நான் உடைந்த சிதைந்த
பாத்திரம் இயேசைய்யா
என்னை கருவியாக
பயன்படுத்தும் இயேசைய்யா (2)
நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா (2)
மறுதலித்த பேதுரு
மனம்கசந்து அழுத நேரம் (2)
உடைந்து போன பாத்திரத்தை
மாற்றினீர்
சபையின் திறவு
கோலை கையிலே கொடுத்தீர் (2)
– நான் உடைந்து
சித்தம் போல உருமாக்கும்
களிமண் நானைய்யா (2)
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின்
பங்கும் நீரே (2)
– நான் உடைந்து
உயிர்ப்பிக்கும் ஜீவநதி
என் தேவன் நீர்தானே (2)
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம்
கையில் தானே (2)
– நான் உடைந்து