நான் பயப்படும் நாளிலே
Naan Payappadum Naalilae
Albert Solomon
நான் பயப்படும் நாளிலே
உம்மை நம்புவேன்
கலங்கிடும் நாளிலே
உம்மையே நம்புவேன்
கர்த்தர் என் சகாயர்
கர்த்தர் என் சகாயர்
கர்த்தர் என் சகாயர்(2)
நான் பயப்படேன் (2) – 2
கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார்
நான் அமர்ந்திருப்பேனே
எனக்கு விரோதமாய் உருவாகும்
ஆயுதம் வாய்க்காமலே போகும்
மந்திரமோ சூனியமோ
சர்பங்களோ பேய்களோ
மரணமோ சேதங்களோ
அசைக்கவே முடியாதே
– கர்த்தர் என் சகாயர்
கர்த்தர் என் விளக்கை எரிய செய்து
நான் எரிந்துக்கொண்டிருப்பேன்
நான் மலையின் மேலுள்ள பட்டணமாக
எரிந்து பிரகாசிப்பேன்
யார் என்ன சொன்னாலும்
யார் என்னை தடுத்தாலும்
யார் என்னை பகைத்தாலும்
அசைக்கவே முடியாதே
– கர்த்தர் என் சகாயர்
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடித்திடுவாரே
நான் முன்னேறி செல்வேன் கம்பீரமாகவே
இயேசுவின் நாமத்திலே
தடைகளோ தடங்கலோ
கஷ்டமோ நஷ்டமோ
கண்ணீரோ காயங்களோ
அசைக்கவே முடியாதே
– கர்த்தர் என் சகாயர்