பாடல்
நான் பாவிதான் ஆனாலும்
Naan Paavithaan Aanaalum
Chandrasekaran
நான் பாவிதான் ஆனாலும்
நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான்
இயேசய்யா இன்று
உம் பிள்ளை நான்
கல்வாரியின் மலைமீதிலே
உம் பாடுகள் எனக்காகத்தான் – 2
உம் கை காலிலே காயமெல்லாம்
நான் செய்த பாவமையா – 2
– நான்
கன்னங்களில் வழிந்தோடிடும்
கண்ணீரும் எனக்காகத்தான்
உம் கை காலிலே வழிந்தோடிடும்
திரு இரத்தம் எனக்காகத்தான் – 2
– நான்
மூன்றாணியால் என் பாவங்கள்
சுமந்து தீர்த்தீரையா
மூன்றாம் நாளில் எனக்காகவே
உயிரோடு எழுந்தீரையா – 2
– நான்