நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பாவி தான் ஆனாலும்

Naan Paavi Thaan Aanaalum

நான் பாவி தான் ஆனாலும் நீர்

மாசற்ற இரத்தம் சிந்தினீர்

வா என்று என்னை அழைத்தீர்

என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

நான் பாவி தான் என் நெஞ்சிலே

கறைபிடித்திருக்குதே

என் கறை நீங்க இப்போதே

என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

நான் பாவி தான் – பயத்தினால்

அலைந்து பாவப்பாரத்தால்

அமிழ்ந்து மாண்டு போவதால்

என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

நான் பாவி தான் – மெய்யாயினும்

சீர் நேர்மை செல்வம் மோட்சமும்

உம்மாலே பெற்று வாழவும்

என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

நான் பாவி தான் இரங்குவீர்

அணைத்துக் காத்து இரட்சிப்பீர்

அருளாம் செல்வம் அளிப்பீர்

என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

நான் பாவி தான் – அன்பாக நீர்

நீங்காத் தடைகள் நீக்கினீர்

உமக்குச் சொந்தம் ஆக்கினீர்

என் மீட்பரே வந்தேன் – வந்தேன்