நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பாடுவேன் உம்மை என்றுமே

Naan Paaduvaen Ummai Entumae

Reegan Gomez

நான் பாடுவேன் உம்மை என்றுமே

நான் போற்றுவேன் உம்மை என்றுமே – 2

தேவனே என் ஜீவனே

தேடி வந்த என் தெய்வமே (2)

ஆராதனை என்றும் உமக்கே

ஆராதனை என்றும் உமக்கே

ஆராதனை என்றும் உமக்கே

ஆராதனை என்றும் உமக்கே (4)

உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்

முழு மனதால் உம்மை நேசிப்பேன் – 2

தாழ்மையிலே என்னை நினைத்தவரே

தாங்கி நடத்தும் என் இயேசுவே – 2

– ஆராதனை

பெலவீன நேரம் பெலன் தந்தீர்

கிருபையினால் தினம் தாங்கினீர்

கண்மணி போல் என்னைக் காப்பவரே

காலமெல்லாம் உம் புகழ் பாடுவேன்

– ஆராதனை

நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே

உம் அன்பால் உள்ளம் பொங்குதே

இதயமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே

மகிழ்வுடனே உம் துதி பாடுவேன்

– ஆராதனை