பாடல்
நான் பாட வருவீர் ஐயா
Naan Paada Varuveer Aiyaa
Chandrasekaran
நான் பாட வருவீர் ஐயா
நான் போற்ற மகிழ்வீர் ஐயா – 2
என் வாழ்விலே வந்தீர் ஐயா
புதுவாழ்வு தந்தீர் ஐயா – 2
தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே – 2
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே – 2
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே
– நான் பாட
இமை பொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் – 2
உந்தன் அன்பை நான் மறப்பேனோ – 2
ஜீவநாளெல்லாம் பாடிடுவேன்
– நான் பாட
மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாது – 2
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – 2
உந்தன் வாக்குகள் மாறாதது
– நான் பாட