நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் ஒன்றுக்கும் உதவாதவன் இந்த உலகம் என்னை ஒதுக்கையிலே

Naan Ontukkum Uthavaathavan Intha Ulakam Ennai Othukkaiyilae

Sirkali Yesuprakasam

நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று

உலகம் என்னை ஒதுக்கையிலே இயேசு

என்னையும் தேடி வந்தார் தன்

பிள்ளையாய் மாற்றி விட்டார்

என்னாலே ஏதுமில்லை என் இயேசுவால்

எல்லாம் ஆகும்

இயேசுவே எல்லாம் இயேசுவே

இயேசுவே எல்லாம் இயேசுவே

இயேசுவே எல்லாம் இயேசுவே

எனக்கெல்லாம் என் இயேசுவே

தாய் என்னை மறந்தாலும் பெற்ற

தந்தை என்னை கைவிட்டாலும்

ஊர் என்னை வெறுத்தாலும் என்

உறவெல்லாம் பகைத்தாலும்

இயேசு என்னை தூக்கி எடுத்தார் என்

வாழ்வை இன்பமாக மாற்றிவிட்டார்

என்னாலே ஏதுமில்லை என்

இயேசுவால் எல்லாம் ஆகும்

– இயேசுவே

கானாவூர் கல்யாணத்தில்

கற்ச்சாடி தண்ணீர் தனை

தேனான திரட்சை ரசமாய் தேவன்

அன்று மாற்றியதைப் போல்

வீணான என் வாழ்க்கையை ஜெய

வெற்றி வாழ்க்கையாக மாற்றினார்

என்னாலே ஏதுமில்லை என்

இயேசுவால் எல்லாம் ஆகும்

– இயேசுவே

மீன் பிடிக்கும் பேதுருவை தனக்கு

ஆள் பிடிக்கும் சிஷன் ஆக்கினார்

ஆடு மேய்த்த தாவீதை நாடு

ஆளுகின்ற ராஜா ஆக்கினார்

பொல்லாத சவுலையும் நல்ல பவுலாக்கிய

எல்லாம் வல்ல இயேசு என்னை

தன் பிள்ளையாய் மாற்றினார்

என்னாலே ஏதுமில்லை என்

இயேசுவால் எல்லாம் ஆகும்

– இயேசுவே