நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து நன்றியோடு கர்த்தரை துதிப்பேன்

Naan Nadanthu Vantha Vaalvai Ninaiththu Nantiyodu Karththarai Thuthippaen

நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து

நன்றியோடு கர்த்தரை துதிப்பேன்

நான் கடந்த வந்த சூழ்நிலைப் பார்த்து

கர்த்தரையே துதித்துப் பாடுவேன்

நன்றி நன்றி நன்றி என்று துதித்துப் பாடுவேன்

நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவேன்

நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே (உமக்கு)

நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே– 2

ஒவ்வொரு நொடியும் என்னோடு இருந்து

கிருபையாய் நடத்தி வந்தீரே

என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

– நன்றி நன்றி

ஒவ்வொரு நிமிஷமும் கூடவே இருந்து

பாதுகாத்து நடத்தி வந்தீரே

என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

– நன்றி நன்றி

ஒவ்வொரு வருஷமும் என்னுடைய ஊழியத்தை

திரளாய் பெருகச் செய்தீரே

என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

– நன்றி நன்றி