நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்

Naan Nadanthu Vantha Paathaikal Karadu Maedukal

Moses Rajasekar

நான் நடந்து வந்த பாதைகள்

கரடு மேடுகள்

நான் கடந்து வந்த பாதைகள்

முட்கள் வேலிகள்

நடக்க முடியல டேடி நடக்க முடியல

தாங்கிக் கொள்ளுங்க

கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க

என் சுயபெலத்தால்

ஓடிப் பார்த்தேன் ஓட முடியல என்

மனபெலத்தால் நடந்து

பார்த்தேன் – நடக்க முடியல என்

தோள் பெலத்தால் சுமந்து

பார்த்தேன் – சுமக்க முடியல என்

கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் –

கடக்க முடியல

– நடக்க முடியல்

என் ஆள் பெலத்தால் ஆளப்

பார்த்தேன் – ஆள முடியல என்

பண பெலத்தால் படைக்கப்

பார்த்தேன்–படைக்க முடியல என்

சொல் பெலத்தால் சாதிக்கப்

பார்த்தேன் – சாதிக்க முடியல என்

வாய் பெலத்தால் வாழப்

பார்த்தேன் –வாழ முடியல

– நடக்க முடியல்