நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் கிறிஸ்துவோடு

Naan Kiristhuvodu

Chandrasekaran

நான் கிறிஸ்துவோடு

கூடவே சிலுவையில்

அறையப்பட்டேன்

ஆனாலும் ஜீவிக்கிறேன் இனி

நான் அல்ல அவரேயெல்லாம் - 2

என்னில் அன்புகூர்ந்து

எனக்காய் ஜீவன் தந்த

இயேசு கிறிஸ்துவையே

என்னாலும் பாடுவேன்

அவர் என் வாழ்வில் ஜீவனே

என்றுமே அவர் என் வாழ்வில் ஜீவனே

– நான் கிறிஸ்துவோடு

ஜீவ வசனம் பிடித்து

சுடராய் பிரகாசிப்பேன்

தேசம் எங்கும் அவரை

உயர்த்தி கொண்டாடுவேன்

தனிமை எனக்கு இல்லை – என்றுமே

தனிமை எனக்கு இல்லை

– நான் கிறிஸ்துவோடு

இலாபம் யாவும் அவர்க்காய்

நஷ்டமாய் எண்ணுகிறேன்

அவரை அறியும் அறிவை

இலாமபாக நினைக்கிறேன்

இயேசுவின் அன்பு போதுமே-என்றுமே

இயேசுவின் அன்பு போதுமே

– நான் கிறிஸ்துவோடு