நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் காணாமல் போன ஆடல்லவா

Naan Kaannaamal Pona Aadallavaa

நான் காணாமல் போன ஆடல்லவா

கர்த்தர் என்னைத் தேடி வந்தார் – 2

ஆதாமை போல ஆண்டவர் வார்த்தையை

அன்று மீறி நான் நடந்தேன்

ஆதாம் தந்த காயீனைப் போல

மனுக்கொலை நான் புரிந்தேன்

ஆரம்பம் முத்லே பாவத்தில் விழுந்தேன்

அன்பர் என்னை தேடி வந்தார்

– நான்

கைநீட்டி என்னை காப்பாற்றி இழுத்தார்

காட்டித் தந்த யூதாஸ் ஆனேன்

கல்வாரி சிலுவையை கர்த்தருக்கு தந்து

பெரும்பழி நான் சுமந்தேன்

கல்லோடு முள்ளில் கால் பின்னிக் கிடந்தேன்

கர்த்தர் என்னை தேடி வந்தார்

– நான்