நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

Naan Etharkaaka Pitikkapattaeno

K.S. Vincent

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

அதை பிடித்துக் கொள்ளும்படி

ஆசையாய் தொடருகிறேன் – நான்

பாடுகள் வந்தாலும்

நஷ்டங்கள் வந்தாலும்

தொடர்ந்து ஓடுகிறேன் – நான்

பின்னானவை மறந்து

முன்னானவை நோக்கி

ஆசையாய் தொடருகிறேன் – நான்

நல்ல போராட்டம் போராடி

ஓட்டத்தை முடித்திடுவேன்

விசுவாசம் காத்துக் கொள்வேன் – நான்

நான் விசுவாசிக்கும் தேவன்

இன்னாரென்று அறிவேன்

ஆசையாய் தொடருகிறேன் – நான்