பாடல்
நான் என் நேசருடையவள்
Naan En Naesarutaiyaval
நான் என் நேசருடையவள்
என் நேசர் எனக்கு உரியவர்
முந்திரிக்கப்பட்ட கிணறு நான்
மறைவு கட்டப்பட்ட ஊற்று நான்
முட்களின் நடுவில் லீலி நான்
மதுரம் கிச்சிலி என் நேசரே
பாசமாய் என்னோடு பேசுவார்
நிச்சயம் என்னோடிருப்பதால்
– நான்
ஆயிரம் பேர்களில் சிறந்தவர்
அன்பரென் நேசரானதால்
வாயின் முத்தங்களால் முத்தியே
வாழ்த்து பெற்று வளமாய் வாழுவேன்
– நான்
வருத்தப்பட்டோர் வாருங்கள் என்றார்
வந்த போது பாரம் சுமந்தார்
தேடுங்கள் கண்டடைவீர் என்றவர்
தேனிலும் மதுரமானவர்
– நான்