நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் ஆராதிக்கும் தேவன் இயேசு

Naan Aaraathikkum Thaevan Yesu

Moses Rajasekar

நான் ஆராதிக்கும் தேவன் இயேசு

என்னை தப்புவிக்க வல்லவர்

அவர் ஜீவனுள்ளவர் வல்லமையுள்ளவர்

நேற்றும் இன்றும் மாறாதவர்

எரியும் சூளையே ஏழு மடங்காய் எரிந்திடு

என் தேவன் தப்புவிக்க வல்லவர்

சிங்க கெபியே என்னை பட்சிக்க வந்திடு

என் தேவன் தப்புவிக்க வல்லவர்

– நான் ஆராதிக்கும்

யோர்தான் நதியே என் முன்னே வந்திடு

உன்னை பிளந்து நடத்த தேவன் வல்லவர்

எரிகோ கோட்டையே தடையாய் நின்றிடு

உன்னை இடித்து நொறுக்க தேவன் வல்லவர்

– நான் ஆராதிக்கும்

பொல்லாத சாத்தானே என்னை எதிர்த்து நின்றிடு

உன்னை விரட்டியடிக்க தேவன் வல்லவர்

வறுமை வியாதியே என்னை தாக்க வந்திடு

என்னை விடுவித்து காக்க தேவன் வல்லவர்

– நான் ஆராதிக்கும்