பாடல்
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
Naam Aaraathikkum Thaevan Nallavar
Chandrasekaran
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே – 2
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
விடுவிக்க வல்லவரே
நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜீவாலை நம்மை
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே
– இடைவிடாமல்
நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன்சென்றிட
கரம்பற்றி நடத்திடுவார்
– இடைவிடாமல்
சத்துருவின் கோட்டைகளை
தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
– இடைவிடாமல்