நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

முத்திரை முத்திரை ஏழு முத்திரை

Muththirai Muththirai Aelu Muththirai

Ravi Bharath

முத்திரை முத்திரை ஏழு முத்திரை

இவைகளை திறப்பது யாரது

இயேசு கிறிஸ்து தான் அது

வெள்ளைக் குதிரையில் ஒருவன்

அந்தி கிறிஸ்து அவன்

ஜெயிக்க வரும் ஒருவன்

ஜனங்களை வஞ்சிப்பவன்

போலியாய் பலர் வந்து போவார்

எச்சரிக்கை வேண்டும்

வேதம் சொல்வதை நன்கு அறியவேண்டும்

இது முத்திரை முதல் முத்திரை

சிவப்பு குதிரையில் ஒருவன்

அதிகாரம் கொண்டவன்

பட்டயம் கையில் கொண்டவன்

பலரை கொல்லும் ஒருவன்

யுத்த செய்திகள் கேட்கும் போது

எச்சரிக்கை வேண்டும்

இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும்

இந்த முத்திரை இரண்டாவது

கருப்பு குதிரையில் சவாரி செய்து

ஒருவன் வருகின்றான்

தராசை கையில் ஏந்திக்கொண்டு

அவனே வருகின்றான்

பூமியெங்கும் பஞ்சம் உண்டாகும்

பட்டினியாலே துன்பம் உண்டாகும்

இந்த முத்திரை முன்றாவது

நாலாம் முத்திரை உடைத்த போது

மங்கின நிறமுள்ள குதிரை

மரணம் என்பது அவனது நாமம்

மேற்கொள்தே பறவை

பஞ்சத்தாலும் போரினாலும்

பூமி அதிர்ந்ததாலும்

கொள்ளை நோயின் பிடியினாலும்

மரணம் மேற்கொள்ளும் மனிதனை

மரணம் மேற்கொள்ளும்

– முத்திரை

ஐந்தாம் முத்திரை உடைத்த போது

பலி பீடத்தின் கீழே

இரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின்

விண்ணப்பம் சென்றது மேலே

தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை

உலகம் பகைத்திடும்

கர்த்தரே தேவன் என்று கூறினால்

கொலையே செய்திடும்

ஆறாம் முத்திரை உடைத்த போது

பூமியும் அதிர்ந்ததே

சூரியன் கருத்து சந்திரன் சிவந்து

விண்மீன் விழுந்ததே

மனுஷ குமாரரின் அடையாளங்கள்

விண்ணில் தெரியுது பார்

மன்னாதி மன்னர் வருவதைப்

பார்த்து மனிதர் புலம்பிடுவார்

இறுதி முத்திரை உடைந்தது

பரலோகில் அமைதி நிலவியது

பூமியின் நியாய தீர்ப்புக்கு

ஆயத்தமாகும் ஒரு அமைதி அது….

– முத்திரை