பாடல்
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
Mikuntha Aanantha Santhosham
Fr. S. J. Berchmans
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோட இருப்பதால்
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்
ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் – அவர்
நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
நித்தமும் நடத்துகின்றார்
– மிகுந்த
எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார்
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம்
– மிகுந்த
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம்
– மிகுந்த