மீனு வாங்கலையோ மீனு… மீனு
Meenu Vaangalaiyo Meenu… Meenu
Moses Rajasekar
மீனுக்கார பேதுரு நானுங்க
இயேசப்பாவின் முதல் சீஷங்க – 2
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க – இயேசு ராஜா
விரும்புகிற சுறா மீனு நானுங்க –
மத்தி மீனு நானுங்க
நெத்திலி மீனு நானுங்க
இயேசு ராஜா
விரும்புகிற சுத்த மீனு நானுங்க – மீனுக்கார
அஞ்சு அப்பம் இரண்டு மீனுங்க என்
ஆண்டவருக்கு பிடிச்ச உணவுங்க – 2
சின்னபையன் கொண்டு வந்தாங்க – அத – 2
அஞ்சாயிரமா மாத்தினாருங்க – 2
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
விரும்புகிற சுறாமீனு நானுங்க
பாறை மீனு நானுங்க
இறா மீனு நானுங்க
இயேசு ராஜா
விரும்புகிற கிழங்கா மீனு நானுங்க
– மீனுக்கார
துள்ள குதிக்கும் டால்பின் மீனுங்க
ஆண்டவர் கையில் கெல்வின் மீனுங்க – எங்க – 2
சேற்றிலிருந்து தூக்கினாருங்க – எனை – 2
மாற்றி மகிமை படுத்துறாருங்க – 2
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
விரும்புகிற சுறாமீனு நானுங்க
உழுவை மீனு நானுங்க
கொழுவை மீனு நானுங்க இயேசுராஜா
விரும்புகின்ற ஷீலா மீனு நானுங்க
– மீனுக்கார
அன்புள்ள மீனு நானுங்க என்னை
யாருமே வெறுத்ததில்லைங்க
பாசமுள்ள இயேசு அப்பாவின் கையில்
பயன்படும் மீனு நானுங்க – உன்னத மீனுங்க – 2
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
விரும்புகிற சுறாமீனு நானுங்க
தங்க மீனு நானுங்க
சிங்க மீனு நானுங்க பரலோகில்
நீந்தி மகிழும் வேங்கை மீனு நானுங்க – வால