பாடல்
மதுர கீதம் பாடிடுவோம் மன்னன்
Mathura Geetham Paadiduvom Mannan
மதுர கீதம் பாடிடுவோம் மன்னன்
இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
ஆனந்தமாக கீதங்கள் பாடி
ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம்
வானங்கள் மேலாக உயர்ந்தவரை
வாழ்த்தி புகழ்ந்து துதித்திடுவோம்
இயேசுவே வாரும் வாஞ்சையைத் தீரும்
வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும்
– மதுர கீதம்
தூதர்கள் போற்றும் தேவன் நீரே
தீங்கொன்றும் செய்யா ராஜன் நீரே
தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்று
தம்மிடம் வருவோரை தள்ளாத நேசர்
– மதுர கீதம்
மாந்தர்கள் போற்றும் ராஜன் நீரே
மரணத்தை ஜெயமாக வென்றவரே
மன்னிப்பை அளித்தீர் மாந்தரை மீட்பீர்
மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பீர்
– மதுர கீதம்