நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மரித்தாலும் பிழைப்பான் அன்றோ

Mariththaalum Pilaippaan Anto

Moses Rajasekar

மரித்தாலும் பிழைப்பான்

அன்றோ – நீதிமான்

பிழைத்தாலும் துதிப்பான் அன்றோ – 2

தேவ தேவனை

தீங்குகள் வரும்போது தேவனை நினைத்திடு

பாடுகள் வரும்போது பரமனை பாடிடு – 2

கண்ணீர் வரும்போது…

நிரிச…தசநி … பநித… கமததமநிச

கண்ணீர் வரும்போது…

கர்த்தரை நினைத்திடு

இகமதிலே அவர் துணையை

நினைத்து நினைத்து

துதித்திட ஜெபம் வருமே

– மரித்தாலும்

கட்டுகள் தனை அறுத்து

கவலைகள் போக்கின

நித்திய தேவனாம் நிமலனை நினைத்திடும்

சத்திய குருவான…

நிரிச…தசநி … பநித… கமததமநிச

சத்திய குருவான சரித்திர நாயகனை

துயில் எழுந்த தன்னை மறந்து

துதித்து துதித்து பாடிட ஜெயம் வருமே

– மரித்தாலும்

ஆசீர்வாத ஊற்றுகளை

அளவின்றி திறப்பவரை

நாசியில் சுவாசம் உள்ள மட்டும் துதித்திடு

மாம்ச தேகம் உள்ள…

ஆ…

மாம்ச தேகம் உள்ள

யாவருக்கும் கர்த்தர் அவர்

நல்லவரை வல்லவரை

புகழ்ந்து புகழ்ந்து

துதித்திட ஜெபம் வரும்

– மரித்தாலும்