நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மரணமே உன் கூர் எங்கே

Maranamae Un Koor Engae

Melvin Manesh

மரணமே உன் கூர் எங்கே

பாதாளமே உன் ஜெயம் எங்கே – 2

கிறிஸ்து எனக்கு ஜீவன்

சாவு எனக்கு ஆதாயம் – 2

மரணம் என்னை தொடுவதில்லையே – 2

இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2

கர்த்தரின் கரம் என்னோடு நான்

எதற்கும் அஞ்சிடேனே அவர்

உள்ளங்கையில் வரைந்துள்ளதால் நான்

எதற்கும் கலங்கிடேனே

இவ்வுலக பாடுகள் எனை

என்ன செய்திடும் – 2

ஆண்டவரின் கிருபை என்னோடு – 2

– இரத்தம்

சேனைகளின் தேவன் என்னோடு

எதிரிபடை அணுகுவதில்லை

சாத்தானின் சதி நாசங்கள் எனை

ஒரு போதும் நெருங்குவதில்லை

கர்த்தரின் கரம் பராக்கிரமம் செய்யும் – 2

ஆண்டவரின் வல்லமை என்னோடு – 2

– இரத்தம்

ஆப்ரகாம் தேவன் என்னோடு

அசுத்தாவி அணுகுவதில்லை

கிறிஸ்துவின் சிந்தை என் மேலே நான்

ஓடி ஓடி ஊழியம் செய்வேன்

பரலோகமே எங்கள் இல்லமே – 2

மரித்தாலும் பிழைப்போம் – 2

– இரத்தம்