நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மரணம் வருது முடிவும் வருது

Maranam Varuthu Mutivum Varuthu

Ravi Bharath

மரணம் வருது முடிவும் வருது

மரிக்கும் முன்னே மனம் திரும்பு

சொத்து சேர்த்தது போதும்

சொகுசாக வாழ்ந்தது போதும்

சோம்பேறியாய் இருந்ததும் போதும்

மனம் திரும்பு

வேத வாக்கு நிறைவேறும் காலம்

வேதனைகள் ஆரம்பிக்கும் காலம்

வேகமாக தேவன் வரும் நேரம்

மனம் திரும்பு மனம் திரும்பு

ஆதியில் வந்த அன்பை மறந்தாய்

பாதியிலே வழி தப்பி நடந்தாய்

உண்மையான ஊழியத்தை துறந்தாய்

மனம் திரும்பு

அவனவன் செயலுக்கு தக்கதாய்

அவனவனுக்கு தேவன் தருவார்

தண்டனைக்கு தப்பிவிட நினைத்தால்

மனம் திரும்பு மனம் திரும்பு

இரட்சிப்பு நாள் குறித்திடாதே

இன்று தானே இரட்சிப்பின் நாளே

காலம் போனால் மீண்டும் வந்திடாதே

மனம் திரும்பு

ஆவி உன்னை பிரிந்திடும் முன்னே

நீ பாவி என்று பரன் சொல்லும் முன்னே

லேவியனால் மாறிவிட நினைத்தால்

மனம் திரும்பு மனம் திரும்பு

– மரணம் வருது