நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மரணம் என்னை நெங்கினாலும்

Maranam Ennai Nenginaalum

Moses Rajasekar

மரணம் என்னை நெங்கினாலும்

மன்னவர் என் அருகிலே

பாதாளம் என்னை சூழ்ந்தாலும்

பரிசுத்தர் என் நடுவிலே (2)

மரணமே உன் கூர் எங்கே

பாதாளமே உன் ஜெயம் எங்கே

ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்தினால்

உன்னை ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தத்தினால் (2)

– மரணம்

மரணதிகில் என்னை சூழும் நேரம்

மாறாதவர் நீர் என் அருகிலே (2)

மனுஷ குமாரனாய் இறங்கி வந்து

என் பாவங்களை மன்னித்தீர்

மறுபடியும் உம் சமூகத்திலே என்னை

சேர்த்து கொள்வேன் என்றீரே

– மரணமே

பயங்கள் என்னை பற்றும் நேரம்

பரனே என் பக்கத்திலே (2)

சாபங்களை நீக்கிட

சிலுவையை சுமந்தீரே (2)

சரித்திர நாயகனாய்

இன்றும் வீற்றுருக்கின்றீர்

– மரணமே

காரிருள் என்னை மிரட்டும் நேரம்

இயேசுவே என் அருகிலே (2)

இரத்தம் சிந்தி சாத்தானின்

தலையை நீர் நசுக்கினீர் (2)

இருளாய் இருந்த என் வாழ்வை

வெளிச்சமாய் மாற்றினீர்

– மரணமே