மரண பள்ளதாக்கில் நடந்தாலும்
Marana Pallathaakkil Nadanthaalum
Thomas Prithvi
மரண பள்ளதாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீர்
என்னை விட்டு நீர் விலகுவதில்லை
என்னை நீர் கைவிடுவதில்லை
உம்மால் நான் என்றும்
மறக்கப்படுவதில்லை
உந்தன் மனதில் இருப்பவன் நானே
உந்தன் உள்ளங்கையில் நானே
உந்தன் கண்ணின்
கண்மணி நானே
ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்ல
பயந்து நடுங்க பெலவீனன் அல்ல
உடன்படிக்கை உடைய ராஜா நானே
ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்ல
பயந்து நடுங்க பெலவீனன் அல்ல
உடன்படிக்கை உடைய ராஜா நானே
உம்மால் நான் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
எந்த மதிலையும்
துதித்து தாண்டுவேன்
வெண்கல வில்லையும் முறிப்பேன்
எனக்காய் யுத்தம்
செய்பவர் என்னோடே
ராஜாதி ராஜா என்னோடே
சேனைகளின்
கர்த்தர் என்றும் என்னோடே
விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்
உந்தன் கிருபை வியக்கும் கிருபையே
விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்
உந்தன் கிருபை வியக்கும் கிருபையே
தகுதியில்லா என்மேல்
உந்தன் இரக்கம்
தகுதியில்லா என்மேல்
உந்தன் உருக்கம்
அதுவே என்மேல்
இருக்கும் உந்தன் கிருபை
தகுதியில்லா என்மேல்
உந்தன் தயவு
தகுதியில்லா என்மேல்
உந்தன் பரிவு
அதுவே என்மேல்
இருக்கும் உந்தன் கிருபை