நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மறக்கப்படுவதில்லை நீ

Marakkappaduvathillai Nee

Fr. S. J. Berchmans

மறக்கப்படுவதில்லை நான்

உம்மால் மறக்கப்படுவதில்லை - 2

கலக்கமில்லை கவலையில்ல

கைவிட மனிதனல்ல - 2

தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்

நான் உன்னை மறப்பதில்லை - 2

கண்முன்னே நீதானே

உன்னை நான் உருவாக்கினேன் -

– கலக்கமில்லை

உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்

எதிர்கால பயம் வேண்டாம் - 2

உன் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த

வாக்குத்தத்தம் நிறைவேறும் - 2

– கலக்கமில்லை

மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்

விலகாது என் கிருபை - 2

விலை கொடுத்து வாங்கி உள்ளேன்

எனக்கே நீ சொந்தம் - 2

– கலக்கமில்லை

ஏசேக்கு சித்னா முடிந்து போனது

ரெகோபோத் தொடங்கிவிட்டது - 2

நீ பலுகி பெருகிடுவாய்

நீ குறுகி போவதில்லை

– கலக்கமில்லை