பாடல்
மன்னிப்பு தாருமையா என் மணவாளனே
Mannippu Thaarumaiyaa En Manavaalanae
Chandrasekaran
மன்னிப்பு தாருமையா என் மணவாளனே
எனக்குள் வாருமையா என் எஜமானனே
மணவாளனே மணவாளனே
எஜமானனே என் இயேசுராஜனே – 2
பாவ வாழ்வை வெறுக்கின்றேனையா
உம் பாதம் காணத் துடிக்கின்றேனையா
பரிசுத்தரே என்னை படைத்தவரே
பாவம் போக்க பலியானீரே – 2
நான் உந்தன் பாதம் சரணமையா
– மணவாளனே
எந்தன் மனதில் ஆறுதலில்லை
என்னை அழைத்தவரே ஆற்றிடுமையா
என் ஆறுதலே என் ஆண்டவரே
யாரிடம் நான் போவேனையா – 2
நான் உம்மிடந்தான் சொல்வேனையா
– மணவாளனே
உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன்
புது ஆவியாலே நிரப்பிடுமையா
என் புகலிடமே என் புது பெலனே
உந்தன் சாயலாக மாற்றுமே – 2
உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன்
– மணவாளனே