பாடல்
மணிக்கணக்காய் உம் பாதம்
Mannikkanakkaay Um Paatham
Bishop Gnanaprakasam
மணிக்கணக்காய் உம் பாதம்
அமர வேண்டுமே என்
மனம் திறந்து உம்மோடு
பேச வேண்டுமே
இயேசுவே இயேசுவே இயேசுவே
என் இயேசுவே
பாரத்தை உந்தன் பாதம் வைக்க வேண்டுமே
ஏக்கத்தை உம்மிடம் சொல்லி ஜெபிக்க வேண்டுமே
உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
உம்மோடு உறவாட வேண்டும்
உம் திட்டம் மறைந்திட வேண்டும்
உம் சித்தம் செய்திட வேண்டும்
– மணிக்கணக்காய்
பொறுமையாக காத்திருக்க பெலம் வேண்டுமே
உம் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டுமே
உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
உம்மோடு உறவாட வேண்டும்
உம் திட்டம் மறைந்திட வேண்டும்
உம் சித்தம் செய்திட வேண்டும்
– மணிக்கணக்காய்
எந்நாளும் உம்மை சார்ந்து வாழ வேண்டுமே
உம்மாக வாழ்ந்து நானும் கனி தர வேண்டுமே
உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
உம்மோடு உறவாட வேண்டும்
உம் திட்டம் மறைந்திட வேண்டும்
உம் சித்தம் செய்திட வேண்டும்
– மணிக்கணக்காய்