நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மன்னன் இயேசு வருகின்றார்

Mannan Yesu Varukintar

Victor P. Larence

மன்னன் இயேசு வருகின்றார்

நீ மகிழ்ந்து பாடிடு

மணவாளன் வருகின்றார்

நீ ஆயத்தபடு

அல்லேலூயா! ஆனந்தமே!

ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)

மகிமையானவர் மறுரூபமானவர்

கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்

லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே

மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர்

– அல்லேலூயா

பொற்தளவீதி அது பொற்பரன் வீதி

பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே

இரத்தினங்களும் இளநீலமும்

படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே

– அல்லேலூயா

வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்

வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே

வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே

நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே

– அல்லேலூயா