நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனிதனின் ஆலோசனை

Manithanin Aalosanai

Ravi Bharath

மனிதனின் ஆலோசனை வீணானது

தேவனின் ஆலோசனை மேலானது

நடந்திடும் என்று மனிதன் கூறுவான்

தேவன் நிறுத்தி வைப்பார்

நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால்

தேவன் நடத்தி வைப்பார்

– மனிதனின்

எதையும் அறிவினால் உன் பலத்தினால்

நடத்திட முடியாது உன்

ஜெபத்தினால் அவர் கிருபையால்

நடக்கும் தவறாது

– மனிதனின்

இதை செய்வேன் நான் அதை செய்வேன்

மனதிலே எண்ணம் உனக்கு

நடந்ததும் இனி நடப்பதும்

இறைவன் மனக்கணக்கு

– மனிதனின்