நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மங்களம் செழிக்க கிருபையருளும்

Mangalam Selikka Kirupaiyarulum

மங்களம் செழிக்க கிருபையருளும்

மங்கள நாதனே….

மங்கள நித்திய மங்கள நீ

மங்கள முத்தியும் நாதனும் நீ

எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ

உத்தம சத்திய நித்திய தத்துவ

மெத்த மகத்துவ அத்தனுக்கத்தனாம்

ஆபிரகாம் தேவன் நீ

– மங்களம்

மணமகன் … அவர்களுக்கும்

மணமகள் ……. அவர்களுக்கும்

மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்

பக்தியுடன் புத்தி முக்தியளித்திடும்

நித்தியனே உனை துத்தியம் செய்திடும்

சத்திய வேதர்க்கும்

– மங்களம்