பாடல்
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
Manavaalvu Puvi Vaalvinil Vaalvu
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
துணைபிரியாது தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது
– நல்ல மணவாழ்வு
ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா
– நல்ல மணவாழ்வு
குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்து கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம் அன்பு உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம்
– நல்ல மணவாழ்வு