மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
Mananthirumpum Paavikkentum Pukalidamae
Ravi Bharath
மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே
வந்தனமப்பா வந்தனமே (2)
திருச்சபை நடுவில் உமது பெயரைச்
சொல்லியே பாடிடுவேன் – திருக்கரம்
செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்
திருச்சபை நடுவில் உமது பெயரச் சொல்லியே
பாடிடுவேன்
உம்முடைய செயல்களெல்லாம்
நினைக்கும் போது வியக்கிறேன்
– வந்தனமப்பா
இரதங்களும் குதிரைகளும் எங்களை
இரட்சிக்க முடியவில்லை – உம்மை
விட்டா எங்களுக்கு வேறே வழியில்லை
இரதங்களும் குதிரைகளும் எங்கள
இரட்சிக்க முடியவில்ல
உம்மை நம்பி வந்துவிட்டோமே
வேறொரு நாமம் அறியவில்லை
– வந்தனமப்பா
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே
கர்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு அவர் சந்நிதியே
– வந்தனமப்பா