நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனமே ஓ மனமே

Manamae O Manamae

Ravi Bharath

மனமே ஓ மனமே

நீ ஏன் அழுகிறாய்

தினமே அனுதினமே

துயரில் விழுகிறாய்

சுமக்க முடியாத சுமையை

ஏன் நீ சுமக்கிறாய்

சகிக்க முடியாத வலியில்

ஏன் நீ தவிக்கிறாய்

உன் பாரங்களை தந்துவிடு

இயேசுவிடம் வந்துவிடு

மற்றவை மறந்துவிடு

– மனமே

எவரும் அறியா ரகசியம்

உனக்குள் இருக்குதோ

மறக்க முடியா அவ்விஷயம்

உன் மனதை உருத்துதோ

நம் தேவனிடம் தயவுண்டு – நீ

வேண்டிக்கொண்டால் விடையுண்டு

விடுதலை உனக்குண்டு

– மனமே

உலகம் தரமுடியா அமைதி

தருபவர் இயேசுதான்

கலகம் வழிந்தோடும் உலகில்

உன் புகலிடம் இயேசுதான்

நீ தேடுகின்ற ஆதரவும்

நாடுகின்ற உண்மை அன்பும்

இயேசு ஒருவரில் தான்

– மனமே