நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மலைகள் விலகிப் போனாலும்

Malaikal Vilakip Ponaalum

Reegan Gomez

மலைகள் விலகிப் போனாலும்

மகிழ்ந்து பாடுவேன்

பர்வதங்கள் பெயர்ந்தாலும்

துதித்து பாடுவேன்

எந்தன் இயேசு என்னை

கைவிடமாட்டார்

இயேசு என்னை மறந்திட மாட்டார்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – என்

அன்பரைத் துதித்துப் பாடுவேன்

தண்ணீர்களை கடந்தாலும்

சோர்ந்திட மாட்டேன்

அக்கினியில் நடந்தாலும்

அழுதிட மாட்டேன்

எந்தன் இயேசு என்னை சுமந்திடுவாரே

இயேசு என்னை ஆதரிப்பாரே

– ஆராதிப்பேன்

மரணமோ நாசமோ

பயப்பட மாட்டேன்

துன்பமோ தொல்லையோ

கலங்கிட மாட்டேன்

எந்தன் இயேசு என்னை காத்திடுவாரே

இயேசு என்னை நடத்திடுவாரே

– ஆராதிப்பேன்

செங்கடலோ யோர்தானோ

முன்னே வந்தாலும்

எரிகோவின் கோட்டைகள்

முன்னே வந்தாலும்

எந்தன் இயேசு எனக்கு ஜெயம் தருவாரே

இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வாரே

– ஆராதிப்பேன்