பாடல்
மலைகள் விலகி போனாலும்
Malaikal Vilaki Ponaalum
Lucas Sekar
மலைகள் விலகி போனாலும்
பர்வதம் நிலையற்றுப் போனாலும்
தேவகிருபையோ விலகாது
தேவ கிருபையோ விலகாது (2)
பூமியில உம்மைத்தவிர
யாருமில்லையே
பரலோகில் உம்மைத்தவிர
யாருமில்லையே (2)
பூமியிலே வாழ்ந்தாலும்
பரலோகம் சென்றாலும் (2)
நீரின்றி துணையேதைய்யா
நீரின்றி வழியேதைய்யா
– மலைகள்
யாரென்னை வெறுத்தாலும்
வெறுக்காதவர்
அனுதினம் தாங்கிடும்
கிருபை அல்லவோ (2)
நிற்பதும் நிலைப்பதும்
கிருபையில்தானே (2)
நீரின்றி துணையேதைய்யா
நீரின்றி வழியேதைய்யா
– மலைகள்
பூமியில அந்நியனும்
பரதேசி நான்
நீரென்னை காண்கின்ற
தெய்வமல்லவோ (2)
உலகத்தின் முடிவுவரை
நடத்திடும் தெய்வமே (2)
நீரின்றி துணையேதைய்யா
நீரின்றி வழியேதைய்யா
– மலைகள்