பாடல்
மகிமையடையும் இயேசு ராஜனே
Makimaiyataiyum Yesu Raajanae
Fr. S. J. Berchmans
மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக – வருக
உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா
– மகிமையடையும்
பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே
– மகிமையடையும்
சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே
– மகிமையடையும்
என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரைய்யா
– மகிமையடையும்
நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா
– மகிமையடையும்