நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மகிழ்ந்து கொண்டாடுவேன்

Makilnthu Konndaaduvaen

Thomas Prithvi

மகிழ்ந்து கொண்டாடுவேன்

மகிழ்ந்து கொண்டாடுவேன்

ஆடிப் பாடுவேன் ஆடிப் பாடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

நீர் என் யெகோவா ரஃபா

சுகம் தரும் தெய்வம் உந்தன்

தழும்புகளால் சுகமானேன் எந்தன்

பெலவீனமும் என்னில் இல்லை

அதனால் கொண்டாடுவேன்

ஆடிப்பாடுவேன்

அதனால் கொண்டாடுவேன்

ஆடிப்பாடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

நீர் என் யெகோவா யீரே என்

தேவைகளை சந்திப்பவர் உந்தன்

ஐசுவரியத்தின்படியே என்

குறைவுகளை நிறைவாக்கினீர்

– அதனால்

சர்வ வல்லவர் எல்ஷடாய்

மிகவும் அதிகமானவர்

நினைப்பதற்கும் மேலாய்

அதிகம் கொடுப்பவர்

– அதனால்

ஆசீர்வாதத்தால் பெலன் கொண்டேன்

பரிபூரணத்தை நான் அடைகிறேன்

நான் ராஜா வீட்டுப் பிள்ளை எனக்கு

எந்த குறைவும் இல்லை

– அதனால்