நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மேசியா … மேசியா…

Maesiyaa … Maesiyaa…

Moses Rajasekar

மேசியா … மேசியா…

மேசியா இயேசு ராஜா – 2

ஓசையுள்ள கைத்தாளத்தோடு

இசையுள்ள மேளத்தாளத்தோடு

ஆசையுடன் நான் பாடும் பாட்டு – என்

இயேசு ராஜாவுக்கு – 2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா– 2

வரப்போகும் ராஜா மேசியா

வந்துவிட்ட ராஜா மேசியா

உயிர்த்தெழுந்த ராஜா மேசியா – நம்மை

வருகையில் சேர்த்திடும் மேசியா

– ஓசையுள்ள

மேகங்களின் மீதே மேசியா

ராக தாள தொனியோடு வருகிறார்

காற்றின் செட்டைகளுடன் மேசியா – நம்மை

மார்போடு அணைதிட வருகிறார்

– ஓசையுள்ள

அன்பே உருவான மேசியா – என்னை

ஆளுகின்ற தெய்வம் மேசியா – 2

ஆத்ம மணாளன் மேசியா – 2 – என்னை

அரவணைக்கும் நேசர் மேசியா – 2

– ஓசையுள்ள