பாடல்
மேகமீது தூதரோடிதோ இதோ
Maekameethu Thootharotitho Itho
மேகமீது தூதரோடிதோ இதோ
மேகமீது தூதரோடிதோ இதோ(2)
மேசியா கிறிஸ்தேசையா
எனதாசை நேசையா
வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய்
மேகத்தோடு போனவரிவர் இவர்
மேகத்தோடு போனவரிவர் இவர்
திரும்பவும் பதினாயிரம்
பரிசுத்தர் சூழ்ந்திட
சீக்கிரம் சீக்கிரம் ஜெகத்தை நோக்கியே
– மேகமீது
ஆரவாரம் கேட்குதே அதோ அதோ
ஆரவாரம் கேட்குதே அதோ அதோ (2)
ஆட்டுக்குட்டியின் பாட்டோ
டெக்காளம் எதிரொலிக்குதே
அல்லேலூயா அருமை இரட்சகா
ஒலிவமலை விட்டேகினார் அன்றே அன்றே
ஒலிவமலை விட்டேகினார் அன்றே அன்றே
உருவத்தோடவர் திரும்பி வருவதை
உற்று நோக்குவோம்
ஓடி பாடி உவந்து போற்றுவோம்
– மேகமீது
மனுவேலன் ராஜன் வருகிறார் ஒரே ஒரே
மனுவேலன் ராஜன் வருகிறார் ஒரே ஒரே
மலை அதிர்ந்திட புவி குலுங்கிட
கடல் கலங்கிட
வானோர் பூவோர் மகிழ்ந்து நிற்கவே
– மேகமீது