நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மாறும் இவ்வுலகினிலே

Maarum Ivvulakinilae

Moses Rajasekar

மாறும் இவ்வுலகினிலே

மாறாத உம் கிருபை – 2

மாறிடும் மனிதன் மாறிடுவான்

மாறாத தேவன் இயேசுவன்றோ – 2

பட்டதும் போதும் சுட்டதும் போதும்

கண்ணீரும் போதும் கவலையும் போதும்

உம் கிருபை எனக்குப் போதும் போதும் – 2

மன்னவா எனக்கு நீர் தான் வேண்டும் – 2

– மாறும்

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

ஞாலம் ஒருநாள் கைவிட்ட ஓடும் – 2

ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு – 2

ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும் – 2

– போதும்