நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மாறாதவர் எந்தன் இயேசு

Maaraathavar Enthan Yesu

Moses Rajasekar

மாறாதவர் எந்தன் இயேசு

என்னை மறவாதர் எந்தன் நேசர் (2)

காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்

ஞாலம் தான் ஓடினாலும் நீர் மாறாதவர் (2)

– மாறாதவர்

மனிதன் சொல்லும் வார்த்தைகள்

மனிதன் போல மாறிப்போம் (2)

உம் வார்த்தைகள் அழியாதது

உம் வசனங்கள் ஒழியாதது (2)

ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே

என் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே

– மாறாதவர்

ஞானங்கள் கூட மங்கிப்போம் உலகத்தின்

ஆஸ்திகள் கூட அழிந்துப்போம் (2)

உம் சமூகமோ ஜீவனுள்ளது

உம் சந்நிதி என் ஆனந்தமே (2)

ஒரு பார்வை பார்த்தால் போதுமே

என் பாரங்களெல்லாம் மறைந்திடுமே

– மாறாதவர்