நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மான்கள் நீரோடையை வாஞ்சித்து

Maankal Neerotaiyai Vaanjiththu

Chandrasekaran

மான்கள் நீரோடையை வாஞ்சித்து

அலைவது போல்

எந்தன் ஆத்துமா தேவா

உம்மை நாடுது – 2

கடந்த காலங்களிலெல்லாம்

உம் சமூகத்தில் மகிழ்ந்திருந்தேன்

இன்று உம்மை எதிர்ப்பார்த்து

மனச்சோர்வால் வாடுகிறேன்

என் ஆத்துமாவே

ஏன் கலங்குகிறாய்

உன் தேவனை நோக்கி கூப்பிடு

– மான்கள்

இரவும் பகலும் எந்தன் கண்ணில்

கண்ணீர் வழிவதேன்

அமைதி தேடி நான் இன்று

எங்கே ஓடுவேன்

என் ஆத்துமாவே

ஏன் கலங்குகிறாய்

உன் தேவனை நோக்கி கூப்பிடு

– மான்கள்

உன் மேவன் எங்கே என்று தினமும்

என் பகைவன் கேட்கிறான்

நானோ உம்மை எதிர்ப்பார்த்து

மனச் சோர்வால் வாடுகின்றேன்

என் ஆத்துமாவே

ஏன் கலங்குகிறாய்

உன் தேவனை நோக்கி கூப்பிடு

– மான்கள்