நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மானிடரை மீட்டிடும் மீட்பராய் இயேசு

Maanidarai Meetdidum Meetparaay Yesu

Bishop Gnanaprakasam

மானிடரை மீட்டிடும் மீட்பராய் இயேசு

மானிடனாய் மண்ணுலகில் பிறந்தாரே

பாவம் போக்கிட பிறந்தவர் இயேசு

சாபம் தீர்த்திட பிறந்தவர் இயேசு

இருள் நீக்கிட இன்பம் தந்திட இயேசு பிறந்தாரே

மகிமையை வெறுத்து இயேசு மானிட ரூபமாய்

மக்களின் பாவம் போக்க மனுவாய் பிறந்தாரே

அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்

வல்லமையுள்ளவர் சமாதானப்பிரபு

வார்த்தையாய் வந்தாரே

– பாவம் போக்கிட

இழந்ததை தேடிட வந்த இறைமகன் இயேசுவே

ஈசாயின் வேரிலே பிறந்த இறைவன் இயேசுவே

வழியும் வாய்மையுமானவராக வாழ்க்கையின்

உறைவிடம் ஆனவராக விண்ணவர் பிறந்தாரே

– பாவம் போக்கிட

உன்னதமானவர் இவர் உலக இரட்சகர்

உன்னையும் என்னையும் பரலோகில் சேர்க்க உதித்தவர்

உள்ளத்தில் இருந்திட வந்தவர் இயேசு

உண்மையாய் வாழ உதவிடும் இயேசு

உனக்காய் பிறந்தாரே

– பாவம் போக்கிட