நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மாலையில் துதிப்போம்

Maalaiyil Thuthippom

Violet Aaron

மலையில் துதிப்போம்

மகிழ்வுடனே மனக்களிப்புடனே

மாண்புகழ் ஏசுவை வானவரோடே

காலை மாலை உறங்காரோ நம்

காவலனாய் இருப்பாரே

ஆவலுடன் துதி சாற்றிடுவீரே

– மாலை

கிருபையின் வாக்கு தந்தாரே - அதை

அருமையாய் நிறைவேற்றினாரே

உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே

– மாலை

சோதனை வந்திட்ட நேரம் அவர்

போதனை செய்தார் அந்நேரம்

சாதனையாகவே நிற்கச் செய்தாரே

– மாலை

அழைத்த மெய் அழைப்பிலே தானே - நாம்

உழைத்திட பெலன் தந்ததேனே

பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே

– மாலை

வயல் நிலம் ஏராளம் காட்டி - அதின்

அறுவடை தாராளம் ஏற்றி

அரிக்கட்டோடே வர கிருபை செய்தாரே

– மாலை