நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

குயவனின் கைகளில் நான் ஒரு களிமண்

Kuyavanin Kaikalil Naan Oru Kalimann

Pastor K. S. Wilson

குயவனின் கைகளில் நான் ஒரு களிமண்

உம் சித்தம் போல என்னை நடத்தும்

விசுவாச பாதையில் துன்பங்கள் வந்தாலும்

விசுவாச வீரனாய் என்னை நிறுத்தும்

உடைந்த என் உள்ளத்தின் வேதனை அறிந்து

ஜெயமாக என்னையும் நடத்திடுமே

– குயவனின்

கண்ணீரின் பாதையிலே நடந்திடுமே நேரத்தில்

கனிவோடு என்னையும் தேற்றிடுமே

தந்தையைப் போல தோள்களில் சுமந்து

ஜெயமாக என்னையும் நடத்திடுமே

– குயவனின்

நீரே என் அடைக்கலம் என் ஏசுதேவா

உம்மையன்றி வேறே விருப்பம் இல்லை

என்னையே உமக்காய் பலியாக தந்தேன்

ஜெயமாக என்னையும் நடத்திடுமே

– குயவனின்