நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

குருசினில் தொங்கியே குருதியும் வடியவே

Kurusinil Thongiyae Kuruthiyum Vatiyavae

Sirkali Yesuprakasam

குருசினில் தொங்கியே குருதியும் வடியவே

கொல்கதா மலை தனிலே நம்

குரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர்

பாவி கொள்ளா கண் கொண்டு (2)

சிரசினில் முள்முடி உருத்திட அறைந்தே

சிலுவையில் சேர்த்தே அய்யோ…

தீயர் திருக்கரம் கால்களில் ஆணிகள் அடித்தார்

சேனைகள் சூழ

ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த

இயேசுவின் விலாவதிலே அவர் தீட்டிய தீட்சை

குருதியும் ஜலமும் திறந்தோற்று ஓடுது பார்

– குருசினில்

பாதகர் நடுவினில் பாவியின் நேசன்

பாதகன் போல் தொங்க

நூத பாதகர் பரிகாசங்கள் பண்ணி

படுத்திய கொடுமைதனை

சந்திர சூரிய சகலதோர் சேனைகள்

சகியாமல் நாந்தைய்யோ

தேவ சுந்தர மைந்தன் உயிர் விடும் காட்சியால்

துடிக்கா நெஞ்சம் உண்டோ

– குருசினில்