நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

குறித்த காலத்திற்கு என்னில்

Kuriththa Kaalaththirku Ennil

John Jebaraj

குறித்த காலத்திற்கு என்னில்

தரிசனம் வைத்தவரே

அது முடிவிலே விளங்கும்

பொய் சொல்லாது அதில்

தாமதம் இல்லை என்றீர்

துதிப்போம் இயேசுவை துதிப்போம்

நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்

துவங்கின இயேசுவை துதிப்போம்

அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்

என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்

தொடர்ந்து சுமந்தீரே

ஏறிட்டு பார் என்று தேசங்கள்

அனைத்தையும்

என் கையில் கொடுத்தீரே

என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்

தொடர்ந்து சுமந்தீரே

மேலான இலக்கை எதிர் நோக்கி

ஓட புது பெலன் தந்தீரே

– துதிப்போம்

முடியாது என்று ஓடி ஒளிந்தும்

தேடி வந்தீரே

போகின்ற தூரம் வெகுதூரம் என்று

புறப்பட செய்தீரே - 2

– துதிப்போம்

அந்நியனாக கால் வைத்த இடத்தை

கரங்களில் கொடுத்தீரே

தேவைகள் எல்லாம் அற்புதமாக

சந்தித்து நடத்தினீரே - 2

– துதிப்போம்