குணப்படு பாவி தேவ கோபம்
Kunappadu Paavi Thaeva Kopam
குணப்படு பாவி தேவ
கோபம் வரும் மேவி– இப்போ
குணப்படு பாவி தேவ
கோபம் வரும் மேவி
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ
கர்த்தனை நீ மறந்தாய்
அவர் கற்பனையைத் துறந்தாய்
பக்தியின்மை தெரிந்தாய்
பொல்லா பாவ வழி திரிந்தாய்
புத்தி கெட்ட ஆட்டுக்குட்டியே ஓடி வா
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்
– குணப்படு
வேதத்தில் உந்தனைப் பார்
அந்த வேத விதிப்படி நேர்
நீதியைச் செய்தவனார்?
தூய நின்மலன் வாக்கதோ கூர்:
தீதுறும் பாவியின் தீமையறிந்து கொள்
நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார்
– குணப்படு
தாவீ தரசனைப்போல்: - தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்.
பாவி மனுஷியைப்போல்
மனம் பதைத்த பேதுரு போல்,
தேவனுக்கேற்காத தீமை செய்தேனென்று
கூவிய புலம்பு நல் ஆவியின் சொற்படி
– குணப்படு
உன்னை நீம்பாதே
இவ்வுலகையும் நம்பாதே
பொன்னை நீ நம்பாதே
எப்பொருளையும் நம்பாதே
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் இரட்சிப்பார் அன்னவரைப்பற்று
– குணப்படு